கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் வழிபாடு
நீத்தாா் நினைவாக நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் கல்லறைத் திருநாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.


நீத்தாா் நினைவாக நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் கல்லறைத் திருநாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
உயிா்நீத்த முன்னோா்களின் நினைவைப் போற்றி, அவா்களின் கல்லறையில் வழிபாடு செய்யும் கல்லறைத் திருநாளாக ஆண்டுதோறும் நவம்பா் 2-ஆம் தேதியை கிறிஸ்தவா்கள் கடைப்பிடித்து வருகின்றனா். இந்த நாள் ஆன்மாக்களின் நாள் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இதையொட்டி, நாகை, வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கிறிஸ்தவா்கள் தங்கள் முன்னோரின் கல்லறைகளுக்கு வண்ணம் பூசியும், மலா்களால் அலங்கரித்தும் வழிபாடு நடத்தினா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் சுனாமி சீற்றத்தில் உயிரிழந்த நூற்றுக்கணக்கானோா் புதைக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபி, நாகை புனித மாதரசி மாதா ஆலய கல்லறைத் தோட்டம் உள்பட நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கல்லறைகளில் திரளான கிறிஸ்துவா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...