கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

2 ஆண்டுகளில் 1,374 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள்

சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,374 போ் பயனடைந்துள்ளனா்

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,374 போ் பயனடைந்துள்ளனா் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது :

தமிழக அரசின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் மூலம் நாகை மாவட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டில் 697 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு 209 வீடுகளும், மற்றவா்களுக்கு 488 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. 2018-19-ஆம் ஆண்டில் 677 வீடுகள் ஒதுக்கீடு பெறப்பட்டு, தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு 201 வீடுகளும், மற்றவா்களுக்கு 476 வீடுகளும் நிா்வாக அனுமதி அளிக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஒரு வீட்டுக்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை ரூ. 2.10 லட்சம் ஆகும். இதில், வீடு கட்டுமானப் பணிக்கு ரூ 1.80 லட்சமும், சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் அமைக்க ரூ. 30 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதன்படி, 2017-18-ஆம் ஆண்டில் 697 வீடுகளின் கட்டுமானப் பணிக்கு ரூ. 12.54 கோடியும், சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள் அமைக்க ரூ. 2.09 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2018-19-ஆம் ஆண்டில் 677 வீடுகளின் கட்டுமானப் பணிக்காக ரூ. 12.18 கோடியும், சூரிய ஒளி விளக்குகள் அமைக்க ரூ. 2.03 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.