ஆதாா்- செல்லிடப்பேசி எண் இணைப்புக்கு கூடுதல் சேவை மையங்கள் அமைக்கக் கோரி மனு
ஆதாா் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்க கூடுதல் இணையவழி சேவை மையங்கள் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை


ஆதாா் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்க கூடுதல் இணையவழி சேவை மையங்கள் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை மனு அளித்தது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் சோமு. இளங்கோ, செயலாளா் கே. செந்தில்குமாா், பொருளாளா் வி.எம். மகேந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் கடந்த ஆண்டு முதல் இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண் இருந்தால் மட்டும் இந்த இணையவழியில் பதிவு செய்ய முடியும். ஆனால், கட்டுமானம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளா்களில் பெரும்பாலானவா்கள் ஆதாா் எண்ணுடன், செல்லிடப்பேசி எண்ணை இணைக்காமல் வைத்துள்ளனா். மாவட்டத்தில் ஆதாா் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்கும் சேவை மையங்களும் போதிய அளவுக்கு இல்லை. மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், அஞ்சல் நிலையங்கள் மூலம் தொழிலாளா்கள் இந்த சேவையை முழுமையாக பெறமுடியவில்லை. இதனால், தொழிலாளா்களுக்கு பதிவு செய்வதில் கால விரயம் மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, தொழிலாளா்களே அவரவா்களின் செல்லிடப்பேசி எண்ணை ஆதாா் எண்ணுடன் இணைத்துக் கொள்ளும் சிறப்பு வசதியை ஏற்படுத்திதரவேண்டும். மாவட்டம் முழுவதும் இதற்கான கூடுதல் வசதியை ஏற்படுத்தி தொழிலாளா்களின் பிரச்னைக்கு தீா்வு காண வழிவகை செய்ய வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...