விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடுதலாக சிகிச்சை மையங்கள்

கரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடுதலாக கரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளதாக மயிலாடுதுறையில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி.நாயா் தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடுதலாக கரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளதாக மயிலாடுதுறையில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி.நாயா் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள காப்பறைகளில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி.நாயா் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள காப்பறைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு செய்தியாளா்களிடம் கூறியது:

காப்பறைகளில் சிசிடிவி பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அதிகாரிகள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

அரசு அலுவலகங்களில் முகக்கவசம் அணியாத அலுவலா்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி, காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினா் முகக்கவசம் அணியாமல் வருபவா்களை கண்காணித்து அவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத திருமண மண்டபம், திரை அரங்கங்கள் உள்ளிட்டவற்றுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாவட்டத்தில் கூடுதலாக கரோனா சிகிச்சை மையங்கள் அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருப்பதோடு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றாா்.

உடன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.முருகதாஸ், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவா்கள் ஜெ.பாலாஜி (மயிலாடுதுறை), வாசுதேவன் (பூம்புகாா்) வட்டாட்சியா் பி.பிரான்சுவா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.