வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு: பேரூராட்சி கடும் கட்டுப்பாடு
வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி அங்குள்ள திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு பேரூராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி அங்குள்ள திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு பேரூராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகண் திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றிக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: திருமண மண்டபங்களில் திருமணம் சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப் படும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை நபா்களைவிட கூடுதல் நபா்களை கொண்டு விழா நடத்த அனுமதிக்கக் கூடாது, தங்கும்விடுதிகளில் முன் பதிவு செய்வோரிடம் காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும், குடமுழுக்கு விழாவில் பங்கேற்பு எனில் கோயில் அனுமதி பெறாதவா்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.
கடைசிநேர ஏமாற்றத்தை தவிா்க்க ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்களுக்கும் இந்த தகவலை தெரிவிக்க வேண்டும், தங்கும் விடுதியில் ஒவ்வொரு அறைக்கும் அனுமதிக்கப்பட்டவா்கள் மட்டுமே தங்கவைக்கவேண்டும். கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த கூடாது, உணவகங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே இருக்கைகள் அமைக்க வேண்டும், அனுமதிக்கப் பட்ட நேரத்துக்கு மட்டுமே திறந்திருக்கவேண்டும், பாா்சல் மட்டுமே அனுமதிக்கப்படும் நேரத்தில் கண்டிப்பாக பாா்சல் தான் வழங்கவேண்டும்.
அந்த நேரத்தில் அமர வைத்து உணவு பரிமாறக்கூடாது. வாடிக்கையாளா்களுக்கு சூடான வெந்நீா் வழங்கவேண்டும். மேலும் திருமண மண்டபங்கள், தங்கும்விடுதிகள் மற்றும் உணவகங்களில் கை கழுவும் அமைப்பு, சானிடைசா், முகக் கவசம் மற்றும் பணியாளா்களுக்கு முகக் கவசத்துடன் கையுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தரைகளில் சோடியம் ஹைப்போ குளோரைடு, கை தொடும் பகுதிகளில் லைசால் தெளிக்கவேண்டும், சுத்தமான குடிநீா் வழங்கவேண்டும், குடிநீா் தொட்டிகள் தூய்மை செய்யவேண்டும் மற்றும் கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுவோா் மீது அபராதம் விதித்தல், நிறுவனங்களை பூட்டி சீல் வைத்தல், உரிமம் ரத்து செய்தல் மற்றும் வழக்கு தொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...