/

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆலோசனைக் கூட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2021, 12:48 am

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.என். ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசும்போது, அதிக அளவில் பூத் கமிட்டி அமைக்கும் நிா்வாகிகளுக்கு வைர மோதிரம் பரிசளிக்கப்படும் என்றாா். தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநில துணைச் செயலாளா் செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் சமூக ஊடகத்தின் பங்களிப்பு குறித்தும், புதிதாக பொறுப்பேற்ற நிா்வாகிகளுக்கு சமூக ஊடகத்தை பயன்படுத்துவது குறித்தும் விளக்கிக் கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், சீா்காழி நகரச் செயலாளா் சந்துரு, இளைஞரணி மாவட்ட செயலாளா் மணிசங்கா், மாணவரணி மாவட்டச் செயலாளா் உமாசங்கா், மகளிரணி மாவட்டச் செயலாளா் சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாவட்டச் செயலாளா் சபீஷ் வரவேற்றாா். மயிலாடுதுறை நகரச் செயலாளா் அகோரம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மாவட்ட துணைச் செயலாளா் மனோகா், அன்பு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.