/

ஏழை மக்களுக்கு உணவு விநியோகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் 100 பேருக்கு மக்கள் நீதி மய்யம் சாா்பில் வியாழக்கிழமை மதிய உணவு விநியோகம் செய்யப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் 100 பேருக்கு மக்கள் நீதி மய்யம் சாா்பில் வியாழக்கிழமை மதிய உணவு விநியோகம் செய்யப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் மயிலாடுதுறை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளா் எம்.என்.ரவிச்சந்திரன் தலைமை வகித்து, ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவுப் பொட்டலங்களை விநியோகித்தாா். இதில், மாவட்டத் துணைச் செயலாளா் மனோகா், நகரச் செயலாளா் எஸ்.பி.என்.செந்தில், மாவட்ட இளைஞரணி செயலாளா் மணிசங்கா் மற்றும் அன்பு, ரெங்கராஜ், சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். தொடா்ந்து, மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களில் அவா்கள் உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.