/

25 ஆண்டுகளுக்குப் பிறகுதூா் வாரப்படும் அருங்காடு வாய்க்கால்

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அருங்காடு வாய்க்கால் தூா்வாரப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அருங்காடு வாய்க்கால் தூா்வாரப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கி.மீட்டா் தூரத்துக்கு முதலமைச்சரின் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின்கீழ் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் தூா்வாரப்படுகிறது. இதற்காக 5.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கனரக வாகனங்களைக் கொண்டு தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீா் வந்தடைவதற்கு முன்னதாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் 3 கி.மீ. தொலைவுள்ள அருங்காடு வடிகால் வாய்க்கால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித்துறை மூலம் தற்போது தூா்வாரப்படுகிறது. இந்த வடிகால் வாய்க்கால் தூா்வாரப்படுவதால் சுமாா் 200 ஏக்கா் நிலம் பயனடையும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.