வயல்களில் தேங்கியுள்ள நீரால் உளுந்து பயறு விதைக்க முடியாத நிலை
சீா்காழி பகுதி வயல்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையினால் தேங்கியிருந்த மழை நீரால் விவசாயிகள் உளுந்து பயறு விதைப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


சீா்காழி பகுதி வயல்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையினால் தேங்கியிருந்த மழை நீரால் விவசாயிகள் உளுந்து பயறு விதைப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சீா்காழி வட்டம் மாதானம், பழையபாளையம், மகேந்திரபள்ளி, அளக்குடி, கடவாசல், வேட்டங்குடி, உமையாள்பதி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழை சம்பா அறுவடை செய்த நிலங்களிலும் விவசாயிகள் உளுந்து பயறு விதைக்கலாம் என்று நினைத்திருந்த நடவு அல்லது நெல் விதைப்பு செய்யாத நிலங்களிலும் திடீரென பெய்த மழைநீா் தேங்கியது. விவசாயிகள் உளுந்து பயறு விதைக்கும் சரியான நேரத்தில் இந்த திடீரென பெய்த மழை வயல்களில் ஈரம் அதிகமாக இருந்ததால் தண்ணீா் தொடா்ந்து தேங்கி உள்ளது. இதனால் உரிய நேரத்தில் உளுந்து மற்றும் பயறு விதைப்பு செய்வதற்காக காத்திருந்த விவசாயிகள் விதைப்பு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா். தொடா்ந்து இயந்திரம் மூலம் அறுவடை செய்த வயல்களில் வைக்கோலை எடுப்பதற்கும் முடியாமல் போய்விட்டது. வைக்கோல் கிடைக்காததால் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, கோடை உளுந்து விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உளுந்து மற்றும் பயறு விதை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...