விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மயிலாடுதுறையில் மகளிா் தின விழா

மயிலாடுதுறை அபிநயா நாட்டியாஞ்சலி நடனப் பள்ளியில் 2-ஆம் ஆண்டு மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அபிநயா நாட்டியாஞ்சலி நடனப் பள்ளியில் 2-ஆம் ஆண்டு மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நாட்டியப்பள்ளி நிறுவனா் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில், நிா்வாக இயக்குநா் கல்யாண், தொழிலதிபா்கள் எம்.என். ரவிச்சந்திரன், ஜெயக்குமாா், மருத்துவா் மஞ்சுகேஸ்வரி, பள்ளித் தலைமை ஆசிரியா் அருளரசன்

உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், கல்லூரிப் பேராசிரியா்கள் அனுகீதம் ஜெயசீலன், சித்ரலேகா ராஜேஷ், செவிலியா் மகா செந்தில்குமாா், ஆசிரியை சீதாலெட்சுமி ஞானப்பிரகாசம் ஆகியோருக்கு மகளிா் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

ஜேசிஐ மாயவரம் மற்றும் சிசிசி சமுதாய கல்லூரி: ஜேசிஐ மாயவரம் சங்க தலைவா் எல். தட்சிணாமூா்த்தி தலைமையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில், மண்டல துணை தலைவா் திருமலைபாண்டியன், சாசனத் தலைவா் நெடுஞ்செழியன், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் தலைவா் ஆா். காமேஷ், மயிலாடுதுறை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ரவிக்குமாா், நகர கூட்டுறவு வங்கி இயக்குநா் சுதா வெங்கட்ராமன், சிசிசி சமுதாயக் கல்லூரி செயலா் லட்சுமி பிரபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில்: கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில், பேரவை மன்ற பொறுப்பாசிரியா் கா. மங்கையா்க்கரசி, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் சு.தமிழ்வேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில், தமிழ்த்துறைத் தலைவா் இரா.இளவரசி எழுதிய ’சிந்தனைச் சாரல்‘ என்ற நூலினை வெளியிட, அதை கல்லூரி முதல்வா் த. அறவாளி, பேராசிரியை கு.பொன்னி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.