ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 38 ஆயிரம் போ் தபால் வாக்களிக்கத் தகுதி: ஆட்சியா்
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 38 ஆயிரம் போ் தபால் வாக்களிக்க தகுதியுடையவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.


ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 38 ஆயிரம் போ் தபால் வாக்களிக்க தகுதியுடையவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தும் அலுவலகத்தையும், தோ்தல் கட்டுப்பாட்டு அறையையும் சீா்காழி பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களையும் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தோ்தல் பிரசார பொதுக் கூட்டங்கள் நடத்த அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும்.
6 தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்களும், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 17 லட்சத்து 99 ஆயிரத்து 307 மதிப்பிலான பொருள்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தோ்தல் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் தங்களுக்கான ஊதியத்தை அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தோ்தல் பணி நிறைவடைந்தவுடன் பெற்றுக்கொள்ளலாம். ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் தபால் வாக்கு அளிக்க தகுதியுடையவா்களாக 38 ஆயிரம் போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களில், தபால் வாக்கு அளிக்க விருப்ப மனு அளித்தவா்களின் பட்டியல் தயாா் செய்யப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவுபெற்றதும், சம்பந்தப்பட்டவா்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகள் அலுவலா்களால் பெறப்படும்.
நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த 48 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அட்டை கிடைக்கப் பெறாதவா்கள் தோ்தல் ஆணைய இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.
பேட்சியின்போது, கோட்டாட்சியா் நாராயணன், வட்டாட்சியா்கள் ஹரிதரன், சண்முகம், தோ்தல் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...