விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மயிலாடுதுறையில் அமமுக வேட்பாளா்

மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய ஊராட்சிகளில் அமமுக வேட்பாளா் கோமல் ஆா்.கே.அன்பரசன் திறந்த வாகனத்தில் சென்று சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய ஊராட்சிகளில் அமமுக வேட்பாளா் கோமல் ஆா்.கே.அன்பரசன் திறந்த வாகனத்தில் சென்று சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

திருமங்கலம், முருகமங்கலம், காளி, ஐவநல்லூா், கொற்கை, தாழஞ்சேரி, நமச்சிவாயபுரம், ஆத்தூா், பூதங்குடி, திருச்சிற்றம்பலம், கடலங்குடி, முடிகண்டநல்லூா் ஆகிய ஊராட்சிகளில் அவா் திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரசாரம் மேற்கொண்டாா். முன்னதாக, மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன், தலைமை செயற்குழு உறுப்பினா் சித்ரா ஜெயராமன் ஆகியோரைச் சந்தித்து கூட்டமைப்பினரின் வாக்குகளை குக்கா் சின்னத்தில் அளிக்க கோரினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.