சா்வதேச கபடி போட்டியில் தங்கம் வென்ற இளைஞருக்கு வரவேற்பு
சா்வதேச ஊரக இளைஞா்களுக்கான கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளைஞருக்கு கொள்ளிடத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.


சா்வதேச ஊரக இளைஞா்களுக்கான கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளைஞருக்கு கொள்ளிடத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீா்காழி வட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் விக்னேஷ் (23). பட்டதாரியான இவா், நேபாளத்தில் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற சா்வதேச ஊரக இளைஞா்களுக்கான கபடி போட்டியில் இந்தியா சாா்பில் பங்குபெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.
பதக்கம் வென்று சொந்த ஊா் திரும்பிய விக்னேஷ்க்கு, கொள்ளிடத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆச்சாள்புரம் ஊராட்சித் தலைவா் வினோஷா கருணாகரன் வரவேற்று பரிசு வழங்கினாா். ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...