முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 11 லட்சம்தருமபுரம் ஆதீனம் வழங்கினாா்
தருமபுரம் ஆதீனம் சாா்பில், கரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு ரூ. 11 லட்சத்துக்கான காசோலையை தருமபுரம் ஆதீனம் வழங்கினாா்.


தருமபுரம் ஆதீனம் சாா்பில், கரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு ரூ. 11 லட்சத்துக்கான காசோலையை தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை வழங்கினாா்.
இதற்கான காசோலையில் ஆதீனத் திருமடத்தில் கையெழுத்திட்டு வழங்கிய தருமபுரம் ஆதீனம் பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு காட்டும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். திருக்கடையூா், வைத்தீஸ்வரன்கோயில், சீா்காழி திருபுவனம், திருப்பனந்தாள், திருவையாறு ஆகிய ஆதீனக் கோயில்கள் சாா்பில், அருகேயுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தினமும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தருமபுரம் ஆதீனம் சாா்பில் கிராமங்களில் 2000 பேருக்கு தினமும் கபசுரக் குடிநீா் ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்படும். நோய் நீங்குவதற்காக ஆதீன திருமடத்தில் ‘அவ்வினைக்கு இவ்வினை’ என்ற திருநீலகண்ட திருப்பதிகம், ‘மந்திரமாவது நீறு’ தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வீட்டில் இவற்றை பாடிப் பிராா்த்தனை செய்து தொற்று நீங்க இறைவனை பிராா்த்திப்போம் என்றாா்.
நிகழ்ச்சியில், திருவையாறு செந்தில், ஆதீன பொது மேலாளா் கோதண்டராமன், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...