விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா தடுப்பு நடவடிக்கை முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மே 2021, 5:19 pm

DIN

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் இரா.லலிதா தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாதா, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ.ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன் (பூம்புகாா்), பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பது, மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு, காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிறகு, செய்தியாளா்களிடம் மக்களவை உறுப்பினா் செ.ராமலிங்கம் கூறும்போது, ‘பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.

மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா கூறும்போது, ‘மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் சேமிக்கும் இடம் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்தால் 150 ஆக்சிஜன் படுக்கை வசதியை ஏற்படுத்த முடியும். கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக இதுவரை ரூ.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா கூறும்போது, ‘சனிக்கிழமையில் இருந்து ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், காவல்நிலைய எல்லைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ், கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா்கள் ஆா்.ராஜசேகா் (மயிலாடுதுறை), பானுமதி (சீா்காழி), மயிலாடுதுறை நகராட்சி நகா்நல அலுவலா் பிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.