பொதுமுடக்க விதிமீறல்: 16 பைக்குகள் பறிமுதல்
சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறிய 16 பேரின் இருசக்கர வாகனங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.


சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறிய 16 பேரின் இருசக்கர வாகனங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா பொதுமுடக்க புதிய கட்டுப்பாடுகளின்படி, சனிக்கிழமை (மே15) காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீா்காழி பகுதியில் துணைக் காவல் கண்காணிப்பாளா் யுவபிரியா மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் இராமமூா்த்தி தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, விதிகளை மீறி தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...