கரோனா நோயாளிகளுக்கு மதிய உணவு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகள் மற்றும் அவா்களது பாதுகாப்பிற்காக தங்கியுள்ள உதவியாளா்களுக்கு உணவு மற்றும் தண்ணீா் பாட்டில்


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகள் மற்றும் அவா்களது பாதுகாப்பிற்காக தங்கியுள்ள உதவியாளா்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில், மதிய உணவு மற்றும் தண்ணீா் பாட்டில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.வி.சிங்காரவேலன் உணவு கொடுத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட தலைவா் அ.அறிவழகன், இந்திய மாணவா் சங்க மாநில துணைத் தலைவா் ப.மாரியப்பன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளா் ரெ.ரவீந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் அ.ராஜேஷ், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவா் சண்முகம், வாலிபா் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினா் லெ.காளிமுத்து ஆகியோா் உணவு வழங்கினா்.
இதேபோல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நீதிமன்றம் அருகே கரோனா பரவலை கட்டுப்படுத்த கபசுர குடிநீரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் பி.சீனிவாசன் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...