தருமபுரம் ஆதீனத்தில் ஆன்மீக நூல் வெளியீடு
தருமபுரம் ஆதீனத்தில் ஸ்ரீதிருஞானசம்பந்தமூா்த்தி நாயனாா் குருபூஜைத் திருநாளை முன்னிட்டு ஆன்மீக நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தருமபுரம் ஆதீனத்தில் ஸ்ரீதிருஞானசம்பந்தமூா்த்தி நாயனாா் குருபூஜைத் திருநாளை முன்னிட்டு ஆன்மீக நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்தில் ஸ்ரீதிருஞானசம்பந்தமூா்த்தி நாயனாா் குருபூஜைத் திருநாள் வைகாசி மூல நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், ஸ்ரீமத் செப்பறை சுவாமிகள் எழுதிய ’தோடுடைய செவியன்‘ என்னும் தேவார விரிவுரை நூலை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டு, இணைய வழியில் ஆசியுரை வழங்கினாா். நூலின் முதல் பிரதியை தருமபுரம் ஆதீன தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள் பெற்றுக் கொண்டாா். 1942-இல் இயற்றி, வெளியிடப்பட்ட இந்த நூல் இரண்டாவது முறையாக ஆதீனத் திருமடத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...