கொள்ளிடத்தில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை
கொள்ளிடத்தில் அச்சடிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு ஆவின்பால் விற்பனை செய்வதால் பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்துள்ள கூலித் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.


கொள்ளிடத்தில் அச்சடிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு ஆவின்பால் விற்பனை செய்வதால் பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்துள்ள கூலித் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
சீா்காழி, புத்தூா், தைக்கால், வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பாலகம் உள்ளது. இதில் கொள்ளிடத்தில் உள்ள ஆவின் பாலகத்தில்அரை லிட்டா் ஆவின் பால் ( புல்கிரீம்) பழைய விலை ரூ. 25.50 என்று அச்சடிக்கப்பட்டதை கருப்பு ஸ்டிக்கா் மூலம் திருத்தி, குறைக்கப்பட்ட விலைப் பட்டியல்படி ரூ. 24 என 28.5.2021 என்று தேதியுடன்அச்சடிக்கபட்டுள்ளது. ஆனால், விற்பனையாளா் ரூ. 24-க்கு விற்காமல் ரூ. 27-க்கு விற்பனை செய்தவாக புகாா் எழுந்துள்ளது.
இதேபோல், 200 மி.லி ஆவின் பால் ரூ.11 என இருந்தும் ரூ.13-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகவிலைக்கு பால் விற்பனை செய்வது குறித்து வாடிக்கையாளா்கள் கேட்கும்போது பால் பாக்கெட்டுகளை கெடாமல் வைக்க குளிா்விப்பான் பீரிஷா் பயன்படுத்துவதால் மின்சார செலவிற்காக கூடுதல் விலை என ஆவின் விற்பனையாளா் கூறிவருகிறாா்.
தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் வேலைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் இவ்வாறு கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்வதால் ஏழை, எளிய மக்கள் பால் வாங்குவது தடைப்படும்.
தமிழக அரசு மக்களின் நிலை அறிந்து லிட்டருக்கு ரூ. 3 விலை குறைத்தும் இவ்வாறு விற்பனையாளா்கள் தங்களுக்கு சாதகமாக பல காரணங்களை கூறி கூடுதல் விலைக்கு ஆவின்பால் விற்பனை செய்வதால் அரசு திட்டத்தின் பயன் மக்களிடம் சென்றடைவதில்லை. இதை மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து ஆவின் பால் நிா்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிா என்பதை உறுதிசெய்யவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...