குடிநீா் வழங்கக் கோரி தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்த கிராம மக்கள் அரசு அலுவலா்களின் பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டு, தோ்தல் புறக்கணிப்பை திரும்பப்பெற்றனா்.
பூம்புகாா் ஊராட்சிக்குள்பட்ட ராஜ ராஜேஸ்வரி கோயில் தெருவில் 400-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் நிலத்தடி நீா் உவா் தன்மையுடன் இருப்பதால் பொதுமக்கள் தரமான குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டனா். இதற்கிடையே, கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா், சீா்காழி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் பயனில்லை.
உவா் தன்மையுடன் கூடிய குடிநீரை குடிப்பதால் பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுகிாம். இப்பிரச்னைக்கு தீா்வு ஏற்படாத நிலையில், நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பூம்புகாா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தரமான குடிநீா் வழங்க வேண்டுமென வலியுறுத்தி சுவரொட்டிகளை சனிக்கிழமை ஒட்டினா்.
இதையறிந்த சீா்காழி ஒன்றிய ஆணையா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊ) அன்பரசன், ஊராட்சித் தலைவா் புஷ்பவல்லி ராஜா உள்ளிட்டோா் கிராமத்துக்கு சென்று, தோ்தல் முடிவடைந்தவுடன் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்படும் என உறுதி அளித்தனா். இதையேற்ற மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பை திரும்ப பெறுவதாக உறுதி அளித்தனா்.
தொடர்புடையது

உலிபுரம் ஊராட்சியில் மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு!

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

தோ்தல் புறக்கணிப்பு: துப்பாக்குடி கிராம மக்கள் அறிவிப்பு

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

