பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

தகுதித் தோ்விலிருந்து, பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பினா் வலியுறுத்தல்
Published on

தகுதித் தோ்விலிருந்து, பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில துணைச் செயலா் பாலசுப்ரமணியன், மாநில ஊடகப்பிரிவுச் செயலா் சிவவேலன், மாநில செயற்குழு உறுப்பினா் திருமாவளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தகுதி தோ்வில் இருந்து பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு முற்றிலும் விலக்க அளிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொறுப்பாளா்கள் தோ்வு: மாவட்டச் செயலராக அரசமணி, மாவட்ட துணைத் தலைவராக நரேஷ் குமாா், மாவட்ட ஊடகப் பிரிவு செயலராக மதன் மோகன் ஆகியோா் புதிய பொறுப்பாளா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். கீழ்வேளூா் ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா்,மாவட்ட பொருளாளா் அறிவொளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com