அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேலவாஞ்சூர் அருகே ஆண் சடலம் மீட்பு

காரைக்கால் பகுதி மேலவாஞ்சூர் மதுக்கடை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் அவரது விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:21 am

DIN

காரைக்கால் பகுதி மேலவாஞ்சூர் மதுக்கடை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் அவரது விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
திருமலைராயன்பட்டினம் பகுதி மேலவாஞ்சூர், மதுக்கடையொன்றின் வாயிலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் உயிரிழந்து கிடப்பதாக, திருப்பட்டினம் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
போலீஸார் அந்த இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.
கருப்பு, வெள்ளை கலந்த தலைமுடி, வெள்ளை நிற முழுக்கை சட்டை, கைலி, நீல நிற அரைக்கால் சட்டை அணிந்திருந்தார். சடலத்தின் வலது இடுப்புப் பகுதியியிலும், கழுத்துப் பகுதியிலும் மச்சம் உள்ளது. இடது கையில் இரட்டை இலை சின்னம் பச்சை குத்தப்பட்டுள்ளது. இவரது விவரம் தெரிந்தோர் திருப்பட்டினம் காவல்நிலையத்தை 0468-233480 என்ற போன் எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும் என காவல்நிலையத்தினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.