
தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் கல்விக் குழு தொடக்கம்
தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் கல்விக் குழு தொடங்கப்பட்டு, தேர்தல் குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் கல்விக் குழு தொடங்கப்பட்டு, தேர்தல் குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
கல்வி நிலையங்களில் தேர்தல் கல்விக் குழு தொடங்கவேண்டும் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலாகும். இதன்படி காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை, மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை உள்ளடக்கி தேர்தல் கல்விக் குழுவை தொடங்குகின்றனர்.
காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இக்குழு தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் கே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியரும், தேர்தல் கல்விக்குழு பயிற்சியாளருமான ஆர்.மோகன் கலந்துகொண்டு வாக்குப் பதிவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.
நாட்டில் 10 கோடி பேர், 14 முதல் 17 வயதுக்குட்பட்டவராக உள்ளதால், இளம் பருவத்தினரை உள்ளடக்கி தேர்தல் கல்விக் குழு தொடங்கவேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் என்ற அவர், வாக்காளராக பதிவு செய்துகொள்ளும் முறை, நேர்மையாக வாக்களிப்பது குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார்.
பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை 565 மாணவர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். நேர்மையாக வாக்களிப்பதாகக் கூறி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தேர்தல் கல்விக் குழு பொறுப்பாளரும், விரிவுரையாளருமான எஸ்.சித்ரா வரவேற்றார். விரிவுரையாளர்கள் ராமநாதன், பாஸ்கரன், விஜயராணி, கவிதா, பிரபாவதி, ஆபிரகாம்லிங்கன், முரளிதரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மாணவர் விக்னேஷ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






