4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கராத்தே பிளாக் பெல்ட் பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

காரைக்காலில் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 2:55 am

காரைக்காலில் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
ஜப்பானீஸ் கோஜூ ரியு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கராத்தே சங்கத்தின் கௌரவத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜிம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், சந்திர பிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டு கராத்தேயில் சிறந்த திறனை வளர்த்துக்கொண்டு, அங்கீகாரம் பெற்ற மாணவ, மாணவியரை வாழ்த்திப் பேசினர்.
 புதுச்சேரி மாணவர் ஒலிம்பிக் சங்கத் தலைவர் ராஜேஷ் பொன்னையா, திருவாரூர் இஷின்ரியூ கராத்தே சங்கத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயத்தை வழங்கிப் பாராட்டினர். நிகழ்ச்சி நிறைவில் வி.ஆர்.எஸ். மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாதெமி மாணவர்களின் தற்காப்புக் கலை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.  வி.ஆர்.எஸ்.குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.