உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

காரைக்கால் கூட்டுறவு நூற்பாலையில் இரும்பு சாதனங்கள் திருட்டு: 5 பேர் கைது

காரைக்கால் கூட்டுறவு நூற்பாலையில் மோட்டார் உள்ளிட்ட பல்வேறு இரும்பு சாதனங்கள் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

காரைக்கால் கூட்டுறவு நூற்பாலையில் மோட்டார் உள்ளிட்ட பல்வேறு இரும்பு சாதனங்கள் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் மேலஓடுதுறை பகுதியில் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இந்த ஆலை மேலாளர் (பொ) விஜய் என்பவர் நிரவி காவல்நிலையத்தில் கடந்த 10 -ஆம் தேதி, ஆலையில் ரூ. 10.5 லட்சம் மதிப்புள்ள மோட்டார், பேட்டரி உள்ளிட்ட பல்வேறு இரும்பு சாதனங்கள் காணாமல்போய்விட்டதாக புகார் அளித்திருந்தார்.
காவல் நிலைய ஆய்வாளர் மரியகிறிஸ்டின் பால்,  நிரவி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜேஸ்மென்ட் உள்ளிட்ட குழுவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரும்பு பொருள்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் புதன்கிழமை கூறியது :  ஆலை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், தனிப்படையினர் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
இதில் மேலஓடுதுறை, பங்களாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பில்பெர்ட் தாஸ் (25) என்பவர் வீட்டில் திருடப்பட்ட சாதனங்கள் சில இருப்பது தெரியவந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில், பொருள்கள் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், காக்கமொழி கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் (27) மற்றும் சிறார் ஒருவரும் சேர்ந்து திருடியதாகவும் தெரிவித்தார். திருடப்பட்ட மோட்டார், ஸ்பானர், இரும்பு மற்றும் அலுமினியம், காப்பர் உள்ளிட்ட பொருள்களை, பழைய இரும்பு பொருள்கள் வாங்கும் தொழில் செய்துவரும் சேணியர் குளத்து தெருவைச் சேர்ந்த மணி (எ) புரட்சிமணி, சேத்திலால் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், தோமாஸ் அருள் திடலை சேர்ந்த கோவிந்தராஜ் ஆகியோரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. பல்வேறு பொருள்கள் உருக்கப்பட்டுவிட்ட நிலையிலும், திருட்டு பொருள்களான 26 கிலோ  காப்பர் வயர், 80 கிலோ அலுமினிய சாதனங்கள், 12 வாட் பேட்டரிகள் 6 உள்ளிட்டவற்றை போலீஸார் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். மேலும், திருட்டு பொருள்கள் விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறுவர் உள்பட கில்பெர்ட் தாஸ்,  மணி, ராஜேந்திரன், கோவிந்தராஜ் ஆகிய 5 பேரை கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள அன்பரசனை தேடிவருகிறோம் என்றார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.