பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தியையொட்டி, காரைக்காலில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடங்கியுள்ளது. 

Published On :

விநாயகர் சதுர்த்தியையொட்டி, காரைக்காலில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடங்கியுள்ளது. 
விநாயகர் சதுர்த்தியையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சதுர்த்தி நாளிலும், அடுத்த சில நாள்களில் கடலிலும், ஆற்றிலும் கரைக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்து முன்னணி சார்பில் காரைக்கால் நகரப் பகுதியில் 52 இடங்களில் விநாயகர் சிலை சதுர்த்தி நாளான வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதேபோல், திருமலைராயன்பட்டினத்தில் 32 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இவை மட்டுமன்றி பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு வியாழக்கிழமை தொடங்கியது. 
இந்து முன்னணி மற்றும் ஸ்ரீசக்தி விநாயகர் மத்தியக் கமிட்டி சார்பில் காரைக்கால் ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் வாயிலில் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.  மாலை நிகழ்ச்சியாக, திருமுறை பாராயணம், ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. செப். 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு மகா கணபதி ஹோமம், மாலை வேத பாராயணம், ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறவுள்ளது. சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் விநாயகர் பாடல் ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பலரும் தங்களது வீட்டில் தயாரித்த கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்டவற்றை கொண்டு சென்று, சிலைகள் முன்பு வைத்து வழிபாடு செய்தனர். இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகள் செப். 15-ஆம் தேதி பகல் 12 மணியளவில் ஏழை மாரியம்மன் கோயில் பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிளிஞ்சல்மேடு கடற்கரையில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், வெவ்வேறு நாள்களில் ஆறு, கடலில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.