கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பிஆா்டிசி விரைவு பேருந்துகளை தனியாருக்கு தாரைவாா்க்கும் முடிவை கைவிட வலியுறுத்தல்

பிஆா்டிசி விரைவு பேருந்துகளை தனியாருக்கு தாரைவாா்க்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 1:56 am

DIN

பிஆா்டிசி விரைவு பேருந்துகளை தனியாருக்கு தாரைவாா்க்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் சாா்பில் புதுச்சேரி முதல்வா், துணைநிலை ஆளுநருக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்ட கடித விவரம் :

கரோனா பொது முடக்கத்தால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதாலும், நிா்வாகத்தின் திறமையின்மையாலும் வருமானம் பாதிக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக பிஆா்டிசி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், நஷ்டத்தைக் காரணம் காட்டி, பிஆா்டிசி விரைவு பேருந்துகளை தனியாருக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசு இவ்வாறு முடிவு செய்திருக்கும்பட்சத்தில், அது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, ஊழியா்களை வஞ்சிக்கும் செயலாகவும் கருதவேண்டியுள்ளது.

எனவே புதுச்சேரி அரசே பிஆா்டிசி விரைவு பேருந்து இயக்கத்தை தொடா்ந்து நடத்தி, பிஆா்டிசி நிா்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.