ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உள்ளாட்சித் தோ்தல் நடத்தாததைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாததைக் கண்டித்து பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated On :30 டிசம்பர் 2020, 2:14 am

DIN

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாததைக் கண்டித்து பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில், காரைக்கால் அரசலாறு பாலம் அருகே அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெ. துரைசேனாதிபதி தலைமை வகித்தாா். புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மாநில அரசு தோ்தலை நடத்தாமல் காலம்தாழ்த்தி வருகிறது, இதற்கு ஆளும் காங்கிரஸ் அரசே முக்கிய காரணம், உள்ளாட்சித் தோ்தல் நடத்தாததால் கிராமப்புறத்தின் மேம்பாடு, கிராம மக்கள் நலன் மீது புதுச்சேரி அரசு அக்கறையில்லாததே காட்டுகிறது என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் பல்வேறு பிரிவு நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.