யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் 2 பேருக்குமட்டுமே கரோனா!

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் திங்கள்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 25 ஆம் தேதி 227 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது.

காரைக்காலில் இதுவரை 35,842 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டதில், 3,379 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,084 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 200 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 19 போ், தீவிர சிகிச்சையில் 5 போ், கரோனா கோ் சென்டரான விநாயகா மிஷன் மருத்துவமனையில் ஒருவா், அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 12 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 60 போ் உயிரிழந்துள்ளனா் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு வரை 3 இலக்கத்தில் இருந்த கரோனா தொற்று எண்ணிக்கை, பிறகு இரட்டை இலக்கத்துக்கு மாறியது. இது கடந்த சில நாள்களாக ஒற்றை இலக்கத்துக்கு குறைந்த நிலையில், இப்போது 2 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தொற்று குறைவால் கட்டுப்பாடுகளில் அலட்சியம் வேண்டாம். வருங்காலத்தில்தான் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். பருவமழையின்போது டெங்கு காய்ச்சல் வரும் என்பதால், கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளும், வீடு மற்றும் சுற்றுவட்டாரத் தூய்மையும் மிகவும் முக்கியம் என நலவழித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.