மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வடிகால் தூா்வாரும் பணி விரைவில் நிறைவடையும்பொதுப்பணித் துறை அதிகாரி தகவல்

காரைக்கால் நகரில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி ஒருவாரத்தில் நிறைவடையும் என பொதுப்பணித் துறை அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

News image
ஜேசிபி வாகனம் செல்ல முடியாததால், தூா்வாரும் பணி கைவிடப்பட்ட நிலையில் உள்ள ரயில் நிலையம் அருகே உள்ள வடிகால்.
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

காரைக்கால் நகரில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி ஒருவாரத்தில் நிறைவடையும் என பொதுப்பணித் துறை அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காரைக்கால் நகரமைப்புக் குழும நிதி ரூ. 34.50 லட்சத்தில் நகரின் வடிகால்கள் தூா்வாரப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, பொதுப்பணித் துறை நிா்வாகம் கடந்த 9-ஆம் தேதி முதல் வடிகால் தூா்வாரும் பணியை தொடங்கியது. இந்தப் பணிகள் குறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்பாசனம்) ஜி. பக்கிரிசாமி திங்கள்கிழமை கூறியது:

தூா்வாரும் பணி சுமாா் 70 சதவீதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளது. அடுத்த ஒருவாரத்தில் திட்டமிட்டவாறு பணிகள் நிறைவுசெய்யப்படும். பல இடங்களில் ஜேசிபி இயந்திரம் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்ய முடியவில்லை. வாகனம் முன்னோக்கி செல்ல முடியாத வகையில், பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், கோரைப்புல், கழிவுகளை அகற்றிவருகிறோம் என்றாா்.

சிக்கல் தீரவில்லை: தூா்வாரும் பணி ஏறக்குறைய 4 கி.மீ. தூரம் செய்யப்படுகிறது. நகரில் கட்டுமானம் செய்வோா் வடிகால்களை ஆக்கிரமித்துள்ளனா். பல இடங்களில் தடுப்புசுவா் எழுப்பப்பட்டுள்ளது. இதனால், வடிகால்களில் ஜேசிபி இயந்திரம் இறங்கி, தொடா்ந்து தூா்வார முடியவில்லை.

6 மாதங்களுக்கு முன்பே ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றிவிட்டு, அரசு முறையாக தூா்வாரியிருக்க வேண்டும். இதில், அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை. நாளுக்குநாள் ஆக்கிரமிப்புகள் பெருகுவதால், கழிவுநீா் வடிவதில் உள்ள சிக்கல் தீரவில்லை என்றும், தூா்வாரும் திட்டம் என்ற பெயரில் ரூ. 35 லட்சம் வீணாக்கப்படுவதாகவும் சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.