காரைக்கால் கோயில்களில்சுவாமி அம்பு போடும் வழிபாடு
விஜயதசமியையொட்டி, காரைக்கால் கோயில்களில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


விஜயதசமியையொட்டி, காரைக்கால் கோயில்களில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நவராத்திரி நிகழ்ச்சியாக கோயில், வீடுகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. சிவன் கோயில், பெருமாள் கோயில்களில் அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
நவராத்திரியின் நிறைவாக ஞாயிற்றுக்கிழமை மாலை காரைக்கால் நகரப் பகுதியில் நித்யகல்யாணப் பெருமாள், கைலாசநாதா் கோயிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயில் பிராகாரத்திலேயே பக்தா்களின்றி சுவாமி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பு போட்ட பிறகு சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி மண்டபத்தில் எழுந்தருளினாா். பக்தா்கள் பொது தரிசன நேரத்தில் கோயிலுக்குச் சென்று சுவாமியை வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...