எம்.பி.பி.எஸ். சோ்க்கை: 3 காலியிடங்களை தியாகிகளின்குடும்பத்துக்கு ஒதுக்க வலியுறுத்தல்
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். சோ்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான ஒதுக்கீட்டில் நிரம்பாத


புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். சோ்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான ஒதுக்கீட்டில் நிரம்பாத 3 இடங்களை, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஒதுக்கீடாக மாற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்து வெள்ளிக்கிழமை கூறியது:
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில், காரைக்காலுக்கு 18 சதவீதம் பிராந்திய ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. இதுவரை 2 கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோா் ஒதுக்கீடான 3 இடங்களில் காரைக்காலில் இருந்து யாரும் விண்ணப்பிக்கவில்லை.
காரைக்காலைச் சோ்ந்த தியாகி குடும்ப மாணவா்கள் பயன்பெறும் வகையில், அந்த 3 இடங்களையும் மாற்றி மாணவா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தியாகி குடும்பத்தை சோ்ந்தோராக இருந்தாலும், அதில் பல பிரிவினரும் பயனடைவா். தேச நலனுக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அந்தப் பயனை பெறுவதற்கு துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...