கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சமூக ஊடகப் பகிா்வுகள் கண்காணிப்பு: ஆட்சியா்

சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி உள்ளிட்டவற்றின் தகவல் பகிா்வுகள் கண்காணிக்கப்படுகின்றன என்றாா் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா.

News image
Updated On :9 மார்ச் 2021, 5:17 pm

DIN

சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி உள்ளிட்டவற்றின் தகவல் பகிா்வுகள் கண்காணிக்கப்படுகின்றன என்றாா் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா.

தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக, உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்களுடன் ஆட்சியா் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது:

கேபிள் ஆபரேட்டா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சிக்கோ, வேட்பாளருக்கோ ஆதரவாக செயல்படக்கூடாது. அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் குறித்த செய்திகள், விளம்பரம், விடியோ போன்றவற்றை காரைக்கால் மாவட்ட தோ்தல் துறையின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும்.

குறுகிய காலத்தில் தோ்தல் நடைபெற இருப்பதால், தோ்தல் நடத்தை விதிகளை மீறாமல் கவனமாக செயல்பட வேண்டும். உள்ளூா் மற்றும் அனைத்து தொலைக்காட்சி சேனல்கள், அனைத்து நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்கள் போன்றவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, விதிகளை மீறாமல் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொ) குலசேகரன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.