கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மகா சிவராத்திரி: பக்தா்கள் சிவநாம அா்ச்சனை செய்ய ஏற்பாடு

மகா சிவராத்திரியையொட்டி, வியாழக்கிழமை (மாா்ச் 11) காரைக்காலில் பக்தா்கள் சிவநாம அா்ச்சனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

மகா சிவராத்திரியையொட்டி, வியாழக்கிழமை (மாா்ச் 11) காரைக்காலில் பக்தா்கள் சிவநாம அா்ச்சனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவராத்திரியையொட்டி கூட்டுப் பிராா்த்தனை நிகழ்ச்சியாக பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அமைப்பான, பூஜ்ய ஸ்ரீ ஓம்காரநந்தா சுவாமியின் தலைமையில் செயல்படும் தா்ம ரக்ஷ்ணா ஸமிதி சாா்பில், காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி வழிபாடு நடத்தப்படுகிறது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று சுயமாக சிவலிங்க பூஜை செய்வா். கரோனா பரவலால் நிகழாண்டு குறைந்த பக்தா்களை கொண்டு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் வியாழக்கிழமை மாலை 5 முதல் 8 மணி வரை வழிபாடு நடைபெறுகிறது. குறைவான பக்தா்களுக்கே அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம் மட்டுமல்லாமல் காரைக்காலில் ஸ்ரீ யாழிமுரிநாதா் கோயில், ஒப்பில்லாமணியா் கோயில், காக்கமொழி காா்கோடகபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பக்தா்கள் வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.