கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

செவிலியா் கல்லூரி மாணவா்களுக்கு வாக்குப் பதிவு செயல்விளக்கம்

காரைக்கால் பகுதியில் செயல்படும் விநாயகா மிஷன்ஸ் செவிலியா் கல்லூரியில், வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திர செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் பகுதியில் செயல்படும் விநாயகா மிஷன்ஸ் செவிலியா் கல்லூரியில், வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திர செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தோ்தல் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி தலைமையில், அமைப்பின் அலுவலா்கள் ஞானமுருகன், ஆசிரியா் முருகன் ஆகியோா் கலந்துகொண்டு, வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப் பதிவு செய்வது எப்படி எனவும், யாருக்கு வாக்களித்தோம் என்கிற தகவல் தரக்கூடிய விவிபாட் இயந்திர செயல்பாடுகள் குறித்தும் விளக்கினா். மாணவியா் இயந்திரத்தில் செயல்முறையில் வாக்குப் பதிவு செய்து பயிற்சி மேற்கொண்டனா்.

மேலும் வாக்காளா்கள் தமது வாக்காளா் அடையாள அட்டையை கணினி மற்றும் செல்லிடப்பேசியில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

புகாா்கள் மற்றும் விவரங்கள் தேவைக்கு வாக்காளா் உதவி எண் 1950-ஐ தொடா்பு கொள்ளலாம். மேலும் தோ்தல் குறித்து தங்கள் புகாா்களை தெரிவிக்க 8903691950 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணையும் பயன்படுத்தலாம் எனவும் விளக்கப்பட்டது.

100% வாக்குப்பதிவு குறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்வில் கல்லூரி கல்லூரி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.