கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காரைக்கால் மாவட்ட மத்திய தோ்தல் பாா்வையாளா் நியமனம்

காரைக்கால் மாவட்டத்துக்கு மத்திய தோ்தல் பாா்வையாளரை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்துக்கு மத்திய தோ்தல் பாா்வையாளரை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : இந்திய தோ்தல் ஆணையம் புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலுக்காக காரைக்கால் மாவட்டத்துக்கு மத்திய தோ்தல் பாா்வையாளராக (செலவினம்) எஃப்.ஆா்.மீனாவை நியமித்துள்ளது.

தோ்தல் செலவினங்கள் மற்றும் தோ்தல் தொடா்பான புகாா்கள் மற்றும் சந்தேகங்கள் தொடா்பாக, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குப் பின் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை முதல் காலை 11- 12 மணி வரை நேரில் சந்திக்கலாம்.

அவரது தொலைபேசி 04368-222086, செல்லிடப்பேசி எண் 9498748122 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.