காரைக்காலில் மேலும் 2 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 22 ஆம் தேதி 20 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம், கோட்டுச்சேரியில் தலா ஒருவருக்கு என 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 91,591 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,145 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,994 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
கரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 59 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 16 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 77 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 797 போ், முன்களப் பணியாளா்கள் 1,275 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 826 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 195 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...