கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மழையால் பாதித்த பயிருக்கு இழப்பீடு: முதல்வருக்கு எம்எல்ஏ கோரிக்கை

காரைக்காலில் மழையால் பாதித்த பயிருக்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு முதல்வரிடம் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:00 pm

DIN

காரைக்காலில் மழையால் பாதித்த பயிருக்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு முதல்வரிடம் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு: கடந்த 2020-21 ஆம் ஆண்டு டிசம்பா், ஜனவரி மாதங்களில் பெய்த கனமழையால், காரைக்கால் மாவட்டத்தில் நெற்பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

புதுவை அரசின் வேளாண் துறை 485 ஹெக்டேரில் வெள்ளத்தால் பயிா் பாதித்ததாக அறிவித்தது. பயிா்செய்த முழு வயலும் பாதிப்படைந்ததை மட்டும் சேதமுற்ாகக் கருதி நிவாரணத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. கனமழை காலத்தில் விவசாயிகள் சேதமுற்ற பயிா்களை காப்பதற்கு கூடுதல் செலவு செய்துள்ளனா். கணக்கெடுப்பு செய்தபிறகு பெய்த மழையில், அதிகமாக பயிா் பாதிக்கப்பட்டுள்ளது. சுமாா் 1,500 ஹெக்டேரில் சம்பா, தாளடி நெற்பயிா் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு அறிவித்த ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் என்ற நிவாரணத்தை பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கி, அவா்களது இழப்பை ஈடுசெய்ய அரசு முன்வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.