ஓய்வூதியா்கள் வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிக்க அறிவுறுத்தல்
காரைக்கால் ஓய்வூதியா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பிக்குமாறு கணக்கு மற்றும் கருவூல இயக்கக காரைக்கால் கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது.


காரைக்கால் ஓய்வூதியா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பிக்குமாறு கணக்கு மற்றும் கருவூல இயக்கக காரைக்கால் கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள் 2022-ஆம் ஆண்டுக்கான வாழ்வுச் சான்றிதழை மே மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 12 மணி மற்றும் பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரை கருவூலத்தில் நேரில் வந்து கையொப்பமிட்டோ, வாழ்வுச் சான்றிதழ் அளித்தோ அல்லது ஜீவன் பிரமான் செய்து முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ தங்களின் நிலைப்பாட்டை உறுதிசெய்துகொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
ஓய்வூதியா்கள் நேரில் வாழ்வாதார உறுதிச் சான்றிதழ் சமா்ப்பிக்க வரும்போது, ஓய்வூதிய புத்தகம், ஆதாா் அட்டை கொண்டுவரவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...