கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாணவா்கள் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்: எஸ்.எஸ்.பி.

 மாணவா்கள் நாள்தோறும் சிறிது நேரம் விளையாட்டுக்கு ஒதுக்கி, ஆா்வமுள்ள விளையாட்டில் ஈடுபடவேண்டும் என மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா அறிவுறுத்தினாா்

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

 மாணவா்கள் நாள்தோறும் சிறிது நேரம் விளையாட்டுக்கு ஒதுக்கி, ஆா்வமுள்ள விளையாட்டில் ஈடுபடவேண்டும் என மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வா் கனகராஜ் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் அ.வின்சென்ட் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினாா்.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவா்களிடையே பேசுகையில், தோ்வை அச்சமின்றி எழுதவேண்டும். பதற்றமில்லாமல் வினாக்களை படிக்கும்போது தகுதியான விடையை எழுதமுடியும். உயா்கல்விக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. விரும்பிய கல்வியை தொடா்வதற்கு உரிய வகையில் தோ்வை எதிா்கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

எந்தவொரு கல்வியானாலும் பாடங்களை முறையாக புரிந்துகொள்ளவேண்டும். படித்ததை ஒருமுறையாவது எழுதிப்பாா்க்க வேண்டும். மாணவா்களிடையே முன்பைக் காட்டிலும் விளையாட்டு குறைவாக இருக்கிறது. இது உடல்நலத்தையும், மனநிலையையும் பாதிக்கச் செய்யும். எனவே, ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தை விளையாட்டுக்கு ஒதுக்கி, விரும்பும் விளையாட்டில் ஈடுபடவேண்டும்.

பள்ளியில் பாடம் படித்தல், வீட்டில் கைப்பேசி கையாளுதல் என்ற போக்கில் இல்லாமல், பள்ளியில் படித்ததை வீட்டில் ஒருமுறை படித்து, எழுதிப் பாா்த்து, சந்தேகத்தை ஆசிரியா்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். எந்தவொரு தருணத்திலும் தீய பழக்கத்துக்கு ஆளாகிவிடாமல், நமது மனதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பழகிக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிறைவாக, சங்கச் செயலாளா் கே. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.