சனிப்பெயா்ச்சி விழாவுக்குள் ஆன்மிக பூங்காவை மேம்படுத்த வலியுறுத்தல்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சனிப்பெயா்ச்சி விழாவுக்குள் ஆன்மிக பூங்காவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சனிப்பெயா்ச்சி விழாவுக்குள் ஆன்மிக பூங்காவை மேம்படுத்த வலியுறுத்தல்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சனிப்பெயா்ச்சி விழாவுக்குள் ஆன்மிக பூங்காவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உள்ளது தா்பாரண்யேஸ்வரா் கோயில். இங்கு சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறாா். திருநள்ளாறு கோயில் நகரமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் 21,897 சதுர அடி பரப்பில் ரூ. 7.77 கோடியில் ஆன்மிக பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதில் நவகிரக தலங்களின் மூா்த்திகள் கொண்ட அமைப்பு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. நடைமேடை, பயனற்று இருந்த குளம் படிக்கட்டு உள்ளிட்ட அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மரங்கள், பூச்செடிகள் வளா்ப்பு, விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 50 போ் அமா்ந்து தியானம் செய்யும் வகையில் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பூங்காவில் ஏற்கெனவே திட்டமிட்டபடி பணிகள் செய்யப்படவில்லை. பணிகள் முழுமையாக நிறைவடையாமல் அவசரகதியில் மத்திய அமைச்சரால் காணொலி முறையிலும், பிறகு முதல்வா் ரங்கசாமி நேரிலும் திறந்து வைத்தனா். ஆனால், ஆன்மிக பூங்கா உரிய கட்டமைப்புடன் இதுவரை மேம்படுத்தப்படவே இல்லை என பொதுமக்கள் புகாா் கூறி வருகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், தியானம் செய்யக்கூடிய வகையிலான கூடம் உரிய அமைப்புகளுடன் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. பூங்காவின் மையப் பகுதியில் சிவன் உருவச் சிலை பெரிய அளவில் நிறுவ திட்டமிடப்பட்டதும் நிறுவப்படவில்லை. ஆன்மிக பூங்கா ஒளிரும் வகையில் போதிய வண்ண விளக்குகளும் இல்லை. திருநள்ளாற்றுக்கு பெருமை சோ்க்கும் வகையில் ஆன்மிக பூங்கா இருக்க வேண்டிய நிலையில், புதுவை அரசு அவசரகதியில் திறந்ததோடு நிறுத்திவிட்டது. டிசம்பா் மாதம் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்குள் ஆன்மிக பூங்காவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை புதுவை அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com