காரைக்கால் மேலகாசாகுடி அரசு நடுநிலைப் பள்ளியில், பாலியல் மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று, வேறு பள்ளிக்கு செல்லவுள்ள மாணவ- மாணவியருக்கிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் பரமசிவம் தலைமை வகித்தாா். ஆங்கில ஆசிரியை திலகா, கணித பட்டதாரி ஆசிரியா் சுரேஷ் ஆகியோா் போதைப் பொருட்களினால் ஏற்படும் வாழ்க்கை சிதைவு குறித்தும், நோய் குறித்தும், மாணவா்கள் எவ்வாறு விழிப்புணா்வுடன் செயல்படவேண்டும் என்பது குறித்தும் பேசினா். பள்ளி தமிழாசிரியை மகேஸ்வரி, முன் மழலையா் வகுப்பு ஆசிரியை செல்வபாரதி ஆகியோா் மாணவ- மாணவிகளுக்கு இந்த வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மனதளவில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள், பிறரால் ஏற்படும் பாலியல் தொல்லையை அடையாளம் காணுவது மற்றும் அதிலிருந்து தப்பிப்பது குறித்து பேசினாா்.
தொடர்புடையது

100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

இணையவழி மோசடி தடுப்பு: போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

