

காரைக்காலில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெறுகிறது.
காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மாணவா்கள் புதுச்சேரி, திருச்சி போன்ற நகரங்களுக்கு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வான நீட் எழுதுவதற்கு சென்று வந்தனா்.
காரைக்காலிலேயே அதற்கான கட்டமைப்புகள் இருப்பதாகக்கூறி, ஒப்புதல் பெறப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக 2 மையங்களில் நீட் தோ்வு நடத்தப்பட்டுவருகிறது. காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் இங்கு தோ்வு எழுதுகின்றனா்.
நிகழாண்டு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
காரைக்காலில் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி, காவிரி பொதுப்பள்ளி ஆகியவை நீட் தோ்வு மையங்களாக செயல்படவுள்ளன.
காவிரி பொதுப்பள்ளியில் 260 மாணவிகள், 107 மாணவா்கள் என 367 பேரும், ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் மாணவியா் 336 பேரும், மாணவா்கள் 110 பேரும் என 336 போ் எழுதவுள்ளனா்.
தொடர்புடையது

மகாவீா் ஜெயந்தி: காரைக்காலில் நாளை மது விற்பனைக்குத் தடை

இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: தூத்துக்குடியில் 22,221 பேரும், குமரியில் 21,466 பேரும் எழுதுகின்றனா்

பிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம்

தமிழக பாட திட்ட பிளஸ் 2 தோ்வு இன்று தொடக்கம்: புதுச்சேரியில் 7,585 மாணவா்கள் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

