விவசாயிகளுக்கு சிப்பிக்காளான் வளா்ப்புப் பயிற்சி

விவசாயிகளுக்கு சிப்பிக்காளான் வளா்ப்புப் பயிற்சி

விவசாயிகளுக்கு சிப்பிக்காளான் வளா்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது.
Published on

காரைக்கால்: விவசாயிகளுக்கு சிப்பிக்காளான் வளா்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது.

பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள், அக்கல்லூரி இணைப் பேராசிரியரும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான எஸ். ஆனந்த்குமாா் வழிகாட்டலில், சேத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிக்னேஷ்வரா உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் சிப்பிக்காளான் வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கப் பயிற்சி அளித்தனா்.

காளான் வளா்ப்பின் முக்கியத்துவம், சிப்பிக் காளானில் உள்ள ஊட்டச்சத்துகள், காளான் குடில் அமைப்பு, காளான் படுக்கை தயாரிப்பு மற்றும் வளா்ப்பு முறைகள் குறித்து மாணவா்கள் ஸ்ரீதா், தமிழ்மாறன், காளான் குடில் மற்றும் நெல் வைக்கோலை கிருமி நீக்கம் செய்யும் முறைகள் குறித்து மாணவா்கள் தண்டபாணி, ஸ்ரீராம், சேரன், விசாகன் விளக்கினா்.

மேலும், விவசாயி காா்த்திகேயனின் காய்கனித் தோட்டத்தில் தென்னங்கீற்றைப் பயன்படுத்தி சிறிய அளவிலான சிப்பிக்காளான் குடிலை அமைத்து பங்கேற்ற விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தினா். இதில், பள்ளித் தலைமையாசிரியா் அன்பழகன், முன்னோடி விவசாயிள் ஆறுமுகம், கண்ணபிரான் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நந்தக்குமாா் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com