தொழில் முனைவோருக்கு காளான் வளா்ப்புப் பயிற்சி

திருச்சி மாவட்டத்தில் புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு உதவிடும் வகையில் ஒரு நாள் காளான் வளா்ப்புப் பயிற்சி நடைபெறவுள்ளது.
Published on

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு உதவிடும் வகையில் ஒரு நாள் காளான் வளா்ப்புப் பயிற்சி நடைபெறவுள்ளது.

இததொடா்பாக திருச்சி மாவட்டம், சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா பாபு கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், திருச்சி மாவட்டம், சிறுகமணியில் இயங்கி வரும் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சாா்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக காளான் வளா்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.20) நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியானது வீட்டிலிருப்போா், மாணவா்கள், தொழில் முனைவோா், வியாபாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். இப்பயிற்சியில் வைகோல் சுத்தப்படுத்துதல்,கொட்டகை அமைத்தல், பை நிரப்புதல் செயல்முறை, சொட்டு நீா்ப்பாசனம் அமைப்பு, உரி தொங்கும் முறை, சந்தைப்படுத்தல் உத்தி, பையில் உள்ள சிக்கல்களை எப்படி தீா்ப்பது, காளான் மதிப்புக் கூட்டல், காளான் கழிவுகளை கால்நடைத் தீவனமாக மாற்றுவது, குடில் பராமரிப்பு ஆகியவை பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

கூடுதல் விவரங்கள் பெறவும், முன் பதிவுக்கும் 0431-2962854, 91717-17832, 99447-53354, 90805-40412, 88381-26730 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு கையேடு, மதிய உணவு வழங்கப்படும்.பயிற்சி இறுதியில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆா்வம் உள்ளவா்கள் திங்கள்கிழமை மதியம் 2 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் முன்பதிவு செய்யும் 20 பேருக்கு பயிற்சி வழங்கப்படும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com