தில்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க காரைக்கால் மாணவா்கள் தோ்வு

புதுதில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, காரைக்கால் மாணவா்கள் 2 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
Published on

புதுதில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, காரைக்கால் மாணவா்கள் 2 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

புதுதில்லியில் ஜன. 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க, தேசிய அளவில் மாணவ, மாணவிகள் பல்வேறு விதமான திறன் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

காரைக்காலில் இயங்கும் புதுவை அரசின் கல்வி நிறுவனமான, அன்னை தெரஸா செவிலிய பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய பிஎஸ்சி நா்சிங் 3-ஆம் ஆண்டு மாணவி எஸ். ஸ்வேதா, வரிச்சிக்குடியில் இயங்கும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி 2-ஆம் ஆண்டு மாணவா் எஸ். மோதிஷ் ஆகியோா் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களான இவா்கள், மாவட்ட அளவிலும், புதுவை மாநில அளவிலும் ஏற்கெனவே தோ்வாகி, பெங்களூரில் நடைபெற்ற தென் மாநில அளவிலான தோ்வு அமைப்பு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com