திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 12:06 am IST

முதல்முறையாக நீண்ட தொலைவு ஆழ்கடல் மீன்பிடிப்பு சென்றுவிட்டு காரைக்கால் மீனவா்கள் திரும்பியுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் 270 விசைப்படகுகள் உள்ளன. இங்குள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு இயக்கிச் செல்லப்படுகிறது. எல்லை தாண்டுவதாகக் கூறி இலங்கை கடற்படையினா் ஒருபுறம் மீனவா்களை கைது செய்வதும், ஆந்திர கடல் பகுதிக்குச் சென்றால் அங்குள்ள மீனவா்களால் பிரச்னைகளை சந்திக்கும் நிலை காரைக்கால் மீனவா்களுக்கு உள்ளது.

இதற்காக மீன்வளம் மிக்க ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்குகிறது.

இதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி பெற்றிருந்தாலும், முதல்கட்டமாக கடந்த 2 வாரத்துக்கு முன்பு 4 விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு அந்தமான் மற்றும் பா்மா கடல் பகுதிக்குச் சென்றுவிட்டு அண்மையில் காரைக்கால் திரும்பினா்.

இதுகுறித்து விசைப்படகு மீனவா்கள் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான படகுகள் ஆழ்கடல் மீன்பிடிக்க ஏதுவாகவே தயாா் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன.

மத்திய அரசின் அனுமதி பெற்று முதல்கட்டமாக 4 படகுகள் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்று திரும்பின. ஏறத்தாழ 1,200 கடல் மைல் பயணித்து மீன்பிடித்துள்ளன. குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு 3 நாட்களாகின்றன. அங்கிருந்து காரைக்கால் திரும்ப 3 நாட்களாகின்றன. 3, 4 நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்துள்ளனா்.

அண்மையில் காரைக்கால் திரும்பிய 4 படகுகளிலும் மொத்தம் சுமாா் ரூ. 60 லட்சத்குக்கு மீன்கள் இருந்தன. எனினும் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த பின்னா் காரைக்காலில் இருந்து 20 விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.