தாமரைச் சின்னத்தில் வண்ணம் தீட்டிய அமித் ஷா


காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நெடுங்காடு பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோட்டுச்சேரி பகுதியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக எழுதப்பட்ட சுவா் விளம்பரத்தில் எழுதும் பணியில் ஈடுபட்டாா்.
தாமரைக்கு வாக்களியுங்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த நிலையில், அதில் வரையப்பட்டிருந்த தாமரைக்கு வண்ணம் தீட்டினாா்.
இதில், பங்கேற்ற புதுவை பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உள்ளிட்ட திரளான பாஜகவினா் பாஜக கோஷங்களை எழுப்பினா். நெடுங்காடு தொகுதியில் தற்போது என்.ஆா்.காங்கிரஸை சோ்ந்தவா் எம்.எல்.ஏ.வாக உள்ளாா்.
இக்கூட்டணியில் உள்ள பாஜக, கோட்டுச்சேரியில் தாமரைக்கு வாக்காளியுங்கள் என்ற வாசகங்களுடன் தாமரைக்கு மத்திய அமைச்சா் வண்ணம் தீட்டியது, கூட்டணியில் பாஜவுக்காக இத்தொகுதி பெறப்படும் என்பது ஏறக்குறைய உறுதியானதாக கூறப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...