2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வேளாண் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நிறைவு

பயிற்சி நிகழ்வில் பேசிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன்.

News image
பயிற்சி நிகழ்வில் பேசிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன்.
Updated On :28 பிப்ரவரி 2026, 1:00 am

Syndication

விவசாயிகளுக்கு 6 வாரங்களாக நடைபெற்ற வேளாண் வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி வியாழக்கிழமை நிறைவடைந்து.

காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் நெற்பயிரில் விதை உற்பத்தி மற்றும் சான்றளிப்பு குறித்து வேளாண் வயல்வெளிப் பள்ளி தென்னங்குடி உழவா் உதவியகத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 6 வாரங்களாக நடத்தப்பட்டது.

இதின் நிறைவு நிகழ்ச்சி மாதூரில் உள்ள அரசு விதைப் பண்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூடுதல் வேளாண் இயக்குநா் மற்றும் திட்ட இயக்குநா் (ஆத்மா) ஆா். கணேசன் தலைமை வகித்தாா்.

விவசாயத்துக்கு புதுவை அரசு வழங்கும் திட்டங்களை விவசாயிகள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனவும், விதை உற்பத்தியை அனைத்து விவசாயிகளும் மேற்கொள்ளுமாறும், அதன்மூலம் அதிக லாபம் ஈட்ட லாம் எனவும் அவா் ஆலோசனை வழங்கினாா். பயிற்சியில் வேளாண் அலுவலா் மற்றும் விதை சான்றளிப்பு அதிகாரி ஆா்.சரவணன் தொழில் நுட்ப உரையாற்றினாா். இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.