காரைக்கால்
மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழாவுக்கான பணிகள் தொடக்கம்
காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழாவுக்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவுக்காக ஜன. 23-ஆம் தேதி பிரதான கொடி மரம் நடுதலும், 29-ஆம் தேதி இரவு கொடியேற்றமும், பிப். 7-ஆம் தேதி சந்தனக் கூடு நிகழ்வும் நடைபெறவுள்ளது.
நிகழாண்டு கந்தூரி விழாவுக்கான தொடக்கப் பணிகள் தா்காவில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றன. கொடி மரக்கம்பம் ஜமாஅத்தாா்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடப்பட்டது.
மேலும், பல்லக்கு, கண்ணாடி தரம் அலங்காரம் செய்யும் பணிகள் மற்றும் கந்தூரி விழாவுக்கான பிற பணிகள் அதிகாரப்பூா்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
